நாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கவனிக்க வேண்டியவை என்ன என்ன? நாம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும்போது அதன் அடிப்படை என்ன, எந்தெந்த விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், என்பது அவசியம். உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்து உள்ளது, உங்களுக்கு வேண்டுமானால் நாங்கள் அனுப்பியுள்ள இணைப்பை நீங்கள் கிளிக் செய்து மேற்கொண்டு நாங்கள் கேட்கும் விவரங்களை கொடுத்தால், உங்களுக்கு அந்த பரிசு கிடைக்கும் என்று சொல்கிறார்கள் அல்லது வங்கியில் இருந்து அழைப்பது போலவும் அல்லது எலக்ட்ரிசிட்டி டிபார்ட்மெண்டில் இருந்து அழைப்பது போலவோ அழைத்து நீங்கள் இந்த விவரங்களை உடனடியாக கொடுக்காவிட்டால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும் அல்லது உங்களுடைய ஏடிஎம் கார்டு முடக்கப்படும் என்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து நம்மை பயமுறுத்துகிறார்கள். இந்த சந்தர்ப்பங்களில் நாம் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும். டெபிட் கார்டின் பின்னாலேயே அதற்கு உண்டான பாஸ்வேர்டு என்ன என்று நாம் எழுதி வைக்கிறோம் அல்லது மொபைல் போனில் விபரங்களை சேமித்து வைக்கிறோம் அல்லது நண்பர்கள் யாருக்காவது நாம் வாட்ஸப...