14 மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
14 மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- by Siva
14 மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்தியாவின் 14 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
ஜம்மு காஷ்மீர் ஹிமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் ஹரியானா உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மே 21 முதல் 24 வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதேபோல் பீகார் ஜார்கண்ட் மேற்கு வங்காளம் ஒரிசா தமிழ்நாடு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மே 21 முதல் 25 வரை மிதமான மழை பெய்யும்
கர்நாடக மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Comments
Post a Comment