”பள்ளிக்கு வந்து படிக்கும் மாணாக்கர்களை கை கூப்பி வரவேற்கிறேன்” - அன்பில் மகேஷ்


”பள்ளிக்கு வந்து படிக்கும் மாணாக்கர்களை கை கூப்பி வரவேற்கிறேன்” - அன்பில் மகேஷ்


திருவாரூர் மாவட்டத்தில் இன்று குடவாசல் ஒன்றியத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை திறந்து வைக்க அன்பில் மகேஷ் வந்திருந்தார். அப்போது மேடையில் பேசிய அவர், ”பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பக்கத்து வீட்டு பிள்ளை எப்படி படிக்கிறார் எதிர் வீட்டு பிள்ளை எப்படி படிக்கிறார் அண்ணன் எப்படி படிக்கிறார் டாக்டர் ஆக வேண்டும் இஞ்சினியராக வேண்டும் நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

 

ஆசிரியர்கள் கண்டிப்பது உங்களுக்காகத்தான். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பள்ளி படிப்பு கல்லூரி படிப்பு முடிந்த பிறகு உங்களை யாரும் வழிவகை செய்து வழிகாட்ட இருக்க மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுடைய ஒன்றே குறிக்கோளாய் படிப்பு படிப்பு என்பதை அறிந்து தெரிந்து அமல்படுத்த வேண்டும்.

முதல்வர் சுகாதாரத் துறை கல்வித் துறை ஆகிய இரண்டு துறையையும் தன்னுடைய கண்களாக பாவித்து செயல்பட்டு வருகிறார் என்றால் வளர்ந்த நாடுகளில் இந்த இரண்டு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி தான் அந்த நாடு வளர உதவியுள்ளது.

மாணாக்கர்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார்கள் அவர்கள் தற்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் தொழில்நுட்பங்களில் சிக்காமல் பள்ளிக்கு வருகை தந்து படிப்பதனால் அவர்களை கை கூப்பி வரவேற்கிறேன்" என்று பேசினார்.

Comments

Popular posts from this blog

Endangered Northern Bald Ibis birds released into wild in Turkey #Turkey