உதகை மலர் கண்காட்சி...முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


உதகை மலர் கண்காட்சி...முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Nilgiris

oi-Jeyalakshmi C

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கோடைவிழாவையொட்டி உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகை வருவர். கோடைவிழாவின் ஒரு பகுதியாக பிரசித்தி பெற்ற மலர்க் கண்காட்சி நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாக மலர் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
உதகையில் மலர்க் கண்காட்சி இன்று முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கண்காட்சி என்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

உதகை : தோடர் பழங்குடியினருடன் இணைந்து இசைக்கு ஏற்ப அசத்தலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனம்! உதகை : தோடர் பழங்குடியினருடன் இணைந்து இசைக்கு ஏற்ப அசத்தலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனம்!

முதல்வர் மு.க ஸ்டாலின்

124வது மலர்க் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவர ஜெரேனியம், சைக்லமன் உட்பட275 ரகங்களில் 5.5 லட்சம்மலர் செடிகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

பூத்துக்குலுங்கும் மலர்கள்

மலர்க்காட்சிமாடம், கண்ணாடி மாளிகையில் 35,000 வண்ண மலர்த் தொட்டிகளில் நடவுசெய்து பராமரிக்கப்பட்டு வந்த செடிகளில், தற்போது மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த தொட்டிகள் காட்சி மாடத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு அலங்காரங்கள்

கண்காட்சியின் சிறப்பம்சமாக பல்லாயிரக்கணக்கான மலர்களால் கோவை வேளாண் பல்கலைக்கழகம், ஊட்டி 200,பல்வேறு கலைகளை பறைசாற்றும் கலைஞர்களின் வடிவங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், லில்லியம்ஸ், கொய் மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

மலர்களின் அணிவகுப்பு

தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில், இறக்குமதிசெய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரியவகை மலர் செடிகளின் தொகுப்பு,பல்வேறு மலர்களின் பலவகைஅலங்காரங்கள், டூலிப்ஸ் மலர்கள் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளூர் விடுமுறை

இன்று 124வது மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்ய 4ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Read more about:

ooty flower show mk stalin nilgiris உதகை மலர் கண்காட்சி ஊட்டி மு க ஸ்டாலின்

English summary

Tamil Nadu Chief Minister MK Stalin today inaugurated the 124th Flower Exhibition at the Ooty Government Botanical Garden. A local holiday has been announced ahead of the flower show. Holidays have been declared today for all state government offices and educational institutions.

Comments

Popular posts from this blog