முடிவுக்கு வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’.. கிளைமேக்ஸில் இப்படியொரு ட்விஸ்டா?


முடிவுக்கு வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’.. கிளைமேக்ஸில் இப்படியொரு ட்விஸ்டா?


நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் கூடிய விரைவில் முடியவுள்ளது. கிளைமேக்ஸை நெருங்கி இருக்கும் இந்த சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

’சரவணன் மீனாட்சி’ ஹிட் சீரியலின் வெற்றிக்கு பிறகு விஜய் டிவியில் மிகப் பெரிய வெற்றி சீரியல் என்றால் அது நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தான். முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு 2ம் பாகத்திற்கும் கிடைத்தது. முதல் பாகத்தை சேர்த்து 2வது பாகம் இதுவரை 1040 எபிசோடுகளை எட்டியுள்ளன. தற்போது சீரியலில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளுக்கு பிறகு சீரியலின் திரைக்கதை ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பலரும் இந்த நெடுந்தொடரை விரும்பி பார்க்கின்றனர். ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த சீரியல் கூடிய விரைவில் முடியவுள்ளது. இந்த சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணம் மாயனாக நடிக்கும் செந்தில் பாலாஜி, மற்றும் சீரியலின் கதைக்களம்.

மீண்டும் சன் டிவியில் சீரியலை இயக்க போகும் ’மெட்டி ஒலி’ கோபி!

சில தினங்களுக்கு முன்பே இந்த சீரியல் முடிய இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் தற்சமயம் இந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லை கடைசி நாளன்று மொத்த சீரியல் குழுவும் கேக் வெட்டி இந்த வெற்றியை கொண்டாடி இருக்கிறார்கள்.

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?

தற்போது சீரியலில் மகேந்திரனுடன் நடைபெற இருந்த சரண்யா கல்யாணம் நின்று விட்டது. பாண்டி சரண்யாவுக்கு தாலி கட்டி விட்டார்., இதை சரண்யா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த பக்கம் தாமரையின் உண்மையான பாசமும் அக்கறையும் மாறனுக்கு புரிய தொடங்கி விட்டது.மாயன் - மகாவுக்கு குழந்தை பிறக்க போகுது. ஜெயிலில் இருந்து வெளியே வந்து இருக்கும் மாசாணி , முத்துராசு சேர்ந்து புது பிளானை போட்டு கொண்டிருக்கிறார்கள்.


 




View this post on Instagram






 

ஐஸ்வர்யாவை கார்த்திக்கின் அம்மா ஏற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட பல பிரச்சனைகளுக்கு முடிவு எட்டிவிட்டது. இப்போது சரண்யா பாண்டியை ஏற்றுக் கொள்ள வேண்டும், மாயனும் மாறனும் சேர வேண்டும், நாச்சியார் - சாராத பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட வேண்டும், கடைசியாக காயத்ரிக்காக கத்தி வர வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பதில் அடுத்த வார எபிசோடில் தெரிய வரும் என தெரிகிறது.


 




View this post on Instagram






 

அதே போல், சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அதில் கத்தியாக நடிக்கும் ராஜூ ஜெயமோகன் இருக்கிறார். அப்படி என்றால் நாம் இருவர் நமக்கு இருவர் கிளைமேக்ஸில் ராஜூ என்ட்ரி கொடுக்கிறாரா? என கேள்வி எழுந்துள்ளது. கூடவே இந்த கொண்டாட்ட புகைப்படத்தில் ஆரம்பத்தில் மகாவாக நடித்த நடிகை ரச்சிதாவும் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

Endangered Northern Bald Ibis birds released into wild in Turkey #Turkey

City Lights Beanie Crochet Pattern CAL for a Cause #CrochetPattern