Posts

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தில் இருந்து வந்த செம அப்டேட்..!

Image
தமிழ் சினிமாவில் மெரினா, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, டான் என இந்த 10 வருடங்களில் ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் பல தடைகளை கடந்து பல புதிய முயற்சிகள் செய்து தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வானோக்கி உயர்ந்து நிற்கிறார் . மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக வாழ்வை ஆரம்பித்து தற்போது நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என ஒவ்வொன்றிலும் அவரது முத்திரையை பதித்து வருகிறார் நம்ப வீடு பிள்ளை சிவகார்த்திகேயன் . இந்நிலையில் இன்று நேற்று நாளை என்ற டைம் மெஷின் கான்செப்ட் ஐ வைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அறிமுக இயக்குனர் ரவி . அந்த படத்துக்கு பிறகு இவர் இயக்கத்தில் சிவா, இஷா கோபிகர் நடித்து வரும் படம் தான் அயலான். உலகம் போற்றும்... விரிவாக படிக்க >>

அருப்புக்கோட்டை பகுதியிலுள்ளபுறக்காவல் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

Image
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குற்றங்கள் செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் நகரில் மதுரை ரோடு நெசவாளர் காலனி, பாலையம்பட்டி சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், விருதுநகர் ரோடு பாவடித்தோப்பு, ராமசாமிபுரம், புறநகர் பேருந்து நிறுத்தம், எம்எஸ் கார்னர், காந்திநகர் நான்குவழிச்சாலை ஆகிய பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதில் சிசிடிவி கேமராக்கள் மானிட்டரிங் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புறகாவல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன. போதுமான போலீசார் இருந்தும் இந்த காவல் நிலையங்களில் போலீசார் பணியில் அமர்த்தப்படவில்லை.  நேருநகர் புறநகர் பேருந்து நிறுத்தம் உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள... விரிவாக படிக்க >>

ஏப்-21: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: பெட்ரோல் விலை டீசல் விலை விற்பனை வர்த்தகம்

சம்பங்கி விளைச்சல் அதிகரிப்பு: மூட்டை மூட்டையாக பூக்களை குளத்தில் கொட்டிய விவசாயிகள்

Image
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம், பெரியகுளம், புளியங்கோம்பை, அரியப்பம்பாளையம், ராமபைலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் சம்பங்கி பூக்கள் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சம்பங்கி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது பூக்களின் தேவை குறைந்துள்ளதால் நேற்று டன் கணக்கில் பறித்து வைக்கப்பட்டிருந்த சம்பங்கி பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பறித்த பூக்களை விவசாயிகள் மினி லாரியில் ஏற்றிச் சென்று சத்தியமங்கலம் அருகே உள்ள... விரிவாக படிக்க >>

ஐபிஎல் தொடரில் லக்னோ-பெங்களூரு இன்று மோதல்

Image
மும்பை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோ, பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பெற்றிருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. இன்றிரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 31வது லீக் போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் களம் காண்கின்றன. இரு அணிகளும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்-ரேட் அடிப்படையில் லக்னோ 3வது இடத்திலும், பெங்களூரூ 4வது இடத்திலும் உள்ளன. இதனால் 5வது வெற்றியை ருசிப்பது யார் என்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. லக்னோ அணி, சென்னையை 6 விக்கெட்... விரிவாக படிக்க >>

குருவிக்காரா் சமூகமும், குறவா் சமூகமும் வேறு என்பதை உலகறியச் செய்ய வேண்டும்: விஜயகாந்த்

Image
விரிவாக படிக்க >>

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

Image
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் விவரம்  துறை காலிப் பணியிடங்கள் Tamil 1 English 2 Economics 1 Political Science , Public Administration 1 Commerce 1 Pscycholoy 2 Computer Science 1 Management Studies 2 Music 2 French 1 Journalism 2 Sanskrit 1 saniva Siddhantha 1 Geography(B.Sc & M.Sc) 2 Sociology (BA & MA) 2 Christian Studies 1 கல்வித்தகுதி: தகுதி: ... விரிவாக படிக்க >>